பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை கருகல் நோய்: கொலிட்ரோடிரைக்கம் கிளியோஸ்போரைட்ஸ்

அறிகுறிகள்:

  • நீள்வட்ட, அளவு மாறுபட்ட நீர் நனைத்த புண்கள் இலை மேல் பரப்பில் காணப்படும்.
  • புள்ளிகள் வெளிர் மஞ்சள் துளையுடன் இருண்ட பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • இலைகள் மற்றும் போலி தண்டு வாடி உதிர்கிறது விடும்.
  • புதிய தண்டுகள் மிகசிறியதாக காணப்படும்.
  • பூ மஞ்சரி, நுனியிலிருந்து காய தொடங்கும்.
  • பாதிக்கப்பட்ட தோட்டம் எரிந்த தோற்றத்தை காட்டும்.

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அளிக்கவும்.
  • கார்பேன்டாசிம் 0.1 சதம் அல்லது மான்கோசெப் 0.2 சதம் அல்லது காப்பர் அக்சிகுளோரைடு 0.25 சதம், 30 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவும்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016